திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் திடீரென மயங்கி விழுந்தார்.
அரியமங்கலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் செல்வி என்பவர் வாடகை கொடுக்காததால் வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டியுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க சென்ற செல்வி, வெகுநேரமாக வரிசையில் நின்றதால் மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து தகவலரிந்த ஆட்சியர் பிரதீப் குமார், மருத்துவமனைக்கு செல்வியை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். மேலும், மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.