நாடு முழுவதும் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ், கூடுதலாக மூன்று கோடி வீடுகள் கட்ட மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், புதிதாக பதவியேற்ற கேபினெட் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அப்போது, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் ஊரகப் பகுதிகளிலும், நகர்ப்புறங்களிலும் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டுவதற்கு நிதியுதவி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்கீழ், இதுவரை 4 கோடியே 21 லட்சம் வீடுகள் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.