இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும் வகையில், மக்களவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்ற மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றார். ‘மோடி 3.0’ அமைச்சரவையில் 72 பேர் பொறுப்பேற்றுள்ளனர்.
மொத்தம் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஐந்து பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். மோடி உட்பட பா.ஜ.,வை சேர்ந்த 61 பேரும், கூட்டணி கட்சியில் 11 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மத்திய அமைச்சர்கள்
1) ராஜ்நாத் சிங்- பாதுகாப்புத்துறை
2) அமித்ஷா- உள்துறை
3) நிதின் கட்கரி- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை.
4) நட்டா- – சுகாதாரத்துறை
5) சிவராஜ் சிங் சவுகான்- விவசாயம், ஊரகவளர்ச்சி
6) நிர்மலா சீதாராமன்- நிதித்துறை
7) ஜெய்சங்கர்- வெளியுறவுத்துறை
8) மனோகர் லால் கட்டார்- வீட்டுவசதி, மின்சாரம்
9) குமாரசாமி- கனரக தொழில்துறை
10) பியூஷ் கோயல்- வணிகத்துறை
11) தர்மேந்திர பிரதான்- கல்வித்துறை, மனித வள மேம்பாடு
12) ஜிதன்ராம் மஞ்சி- சிறு, குறு, நடுத்தர தொழில்துறை
13) லாலன் சிங்– பஞ்சாயத்து ராஜ்
14) சர்பானந்த சோனவால்- கப்பல் துறை
15) வீரேந்திர குமார்-
16) ராம் மோகன் நாயுடு- சிவில் விமான போக்குவரத்து
17) பிரகலாத் ஜோஷி- உணவுத்துறை
18) ஜூவல் ஓரம்-
19) கிரிராஜ் சிங்- ஜவுளித்துறை
20) அஸ்வினி வைஷ்ணவ்- ரயில்வேத்துறை
21) ஜோதிராதித்ய சிந்தியா- தொலைதொடர்புத்துறை
22) பூபேந்திர யாதவ்-
23) கஜேந்திர சிங் ஷெகாவத்- சுற்றுலாத்துறை
24) அன்னபூர்ணா தேவி- மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்
25) கிரண் ரிஜிஜூ- பார்லிமென்ட் விவகாரத்துறை
26) ஹர்தீப் சிங் புரி- பெட்ரோலியதுறை
27) மன்சுக் மாண்டவியா- தொழிலாளர் நலன், விளையாட்டுத்துறை
28) கிஷன் ரெட்டி-நிலக்கரி, சுரங்கம்
29) சிராக் பஸ்வான்- விளையாட்டுதுறை
30) சி.ஆர்.பாட்டீல்- ஜல்சக்தி