மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற எல்.முருகனுக்கு மீண்டும் தகவல், ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
3-வது முறையாக பிரதமராக பதவியேற்று நரேந்திர மோடி சாதனை படைத்த நிலையில், அவரது அமைச்சரவையில் மொத்தம் 71 பேர் பொறுப்பேற்றுள்ளனர். அதில் தமிழக பாஜகவைச் சேர்ந்த எல். முருகனும் ஒருவராவார். கடந்த முறை மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்ட எல்.முருகனுக்கு தகவல், ஒலிபரப்புத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த முறையும் எல்.முருகனுக்கு அதே துறையே ஒதுக்கப்பட்டுள்ளது.