மத்திய உள்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றக்கொண்ட் அமித் ஷா, தனது பணிகளை தொடங்கினார்.
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா சுமார் 7 லட்சம் வாக்கு வித்தியாச்தில் வெற்றி பெற்றுள்ளார். அமித் ஷாவுக்கு 10,10,972 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சோனல் ரமன்பாய் படேல் 2,66,256 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சராக அவர் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஏற்கனவே வகித்த உள்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் தமது அலுவலகத்திற்கு சென்ற அவர் தமது பணிகளை தொடங்கினார். இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி.நட்டா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் முறைப்படி தங்கள் பணிகளை தொடங்கினார்.