அமைச்சர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு என மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள அலுவலகத்தில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சராக பொறுப்பேற்ற அவருக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, நாட்டின் அடுத்தகட்ட பெட்ரோலிய தேவையை ஆராய்ந்ததும், அதற்கு என்னால் எந்த அளவுக்குப் பங்களிப்பு செய்ய முடியும் என்பதை கணிக்க இயலும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அமைச்சராக பணியைத் தொடங்குவதற்கு முன் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறையின் பொறுப்பு மற்றும் செயல் திறனை தான் அறிய வேண்டியது இருப்பதாக சுரேஷ் கோபி கூறியுள்ளார்.