திரையரங்கு உரிமையாளர்கள் கட்டணத்தை குறைத்தால் ஏழை எளிய மக்களும் குடும்பத்துடன் திரையரங்குக்கு வருவார்கள் என ராமராஜன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள TPV மல்டிபிளக்ஸ் திரையரங்கில் நடிகர் ராமராஜனின் ’சாமானியன்’’ திரைப்படம் 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக திரையரங்கத்துக்கு வருகை தந்த ராமராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சாமானியன் திரைப்படத்தை அனைவரும் காணும் வகையில் ஆலங்குளம் TPV திரையரங்கில் இனி 50 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்தார். கரகாட்டக்காரன் திரைப்படத்தை மீண்டும் திரையிடுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.