வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் கைபற்றப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்த 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், அலுவலகத்தை தாழிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.