திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்டு,அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த நா.புகழேந்தி உயிரிழந்த காரணத்தால்,) கவுதம் சிகாமணி விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாகவும் திமுக அறிவித்துள்ளது.