இந்தியாவின் பாதுகாப்பு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரித்துள்ளது.
இதுதொடர்பாக அவர் தெரிவிதுள்ளதாவது : “பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டேன். உள்துறை அமைச்சகம் எப்போதும் போலவே தேசம் மற்றும் மக்களின் பாதுகாப்பில் உறுதியாக இருக்கும்.
பயங்கரவாதம், கிளர்ச்சி மற்றும் நக்சலிசத்திற்கு எதிராக பாரதத்தை ஒரு அரணாக உருவாக்க முயற்சி எடுக்கப்படும்.
பிரதமர் மோடியின் பாதுகாப்பான பாரதம் என்ற பார்வையை நனவாக்க புதிய அணுகுமுறைகளை அறிமுகப்படுத்தும். மோடியின் புத்திசாலித்தனமான தலைமையின் கீழ், கூட்டுறவு அமைச்சகம் ‘சஹகார் சே சம்ரித்தி’ என்ற பார்வையுடன் விவசாயிகள் மற்றும் கிராமங்களை மேம்படுத்துவதில் உறுதியாக இருக்கும் என அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.