சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே அடகு கடையில் 300 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை சம்பவத்தில், இரவு நேர பணியில் இருந்த எஸ்.ஐ. மற்றும் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தச்சம்புதுப்பட்டி சாலையில் பாண்டித்துரை என்பவர் ஃபைனான்ஸ் மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் சுவரை நவீன இயந்திரம் மூலம் துளையிட்டு, லாக்கரில் இருந்த 300 சவரன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதகுபட்டி காவல் நிலையத்தில் இரவு நேர பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ பாண்டி மற்றும் காவலர் சாகுல் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.