இந்திய ராணுவ புதிய தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் கடந்த மே.31-ம் தேதி நிறைவடைந்தது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அவர் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய ராணுவ தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நாட்டின் 30-வது ராணுவ தளபதியாக அவர் ஜூன் 30ஆம் தேதி பொறுப்பேற்பார் என கூறப்படுகிறது.
சுமார் 40 ஆண்டு காலமாக ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய உபேந்திர திவிவேதி பிப்ரவரி 19-ஆம் தேதி ராணுவ துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவா் பரம் விசிஷ்ட் சேவை பதக்கம் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.