ஜம்மு காஷ்மீரில் நடந்த மோதலில் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
கத்துவா நகரை அடுத்த ஹிராநகர் கிராமத்தில் நேற்று இரவு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் தீவிரவாதி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
அப்பகுதியில் மற்றொரு தீவிரவாதி பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து ட்ரோன் உதவியுடன் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தோடா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் காயம் அடைந்த சிலர் பாதர்வா துணை மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.