சென்னை சைதாப்பேட்டையில் காய்கறி சந்தையை புதுப்பித்தல் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சைதாப்பேட்டை காய்கறி சந்தையில் உள்ள 200 கடைகளை சென்னை மாநகராட்சி சார்பில் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி பிரவீன் குமார் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தார். அப்போது கடைகளின் பரப்பளவு, மொத்த கடைகளின் எண்ணிக்கை, கடைகளை எவ்வாறு மாற்றி அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.