ரஜோரி தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
பாகிஸ்தானிடம் இருந்து ஜம்மு காஷ்மீரின் ரஜோரியை இந்திய ராணுவம் மீட்டதை குறிக்கும் வகையில் ஏப்ரல் 13ஆம் தேதி ரஜோரி தினம் கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து ரஜோரியில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு படையினர் பல்வேறு சாகச நிகழ்ச்சியை செய்து காட்டினர். மேலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.