சிவகங்கை அருகே ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி பின்புறம் வழியாக ஒருவர் ஹவாலா பணத்தை கொண்டு செல்ல இருந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த, 4 பேர் அந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த சாக்கோட்டை காவல் ஆய்வாளர் கண்ணதாசன், அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது தப்பியோட முயன்ற சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியை போலீஸார் விரட்டி பிடித்தனர். தப்பியோடிய அழகேசன், விஜய் மற்றும் கோதண்டராமன் ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
















