நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 23 மாணவர்கள் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேசிய தேர்வு முகமை தலைமை இயக்குனர் சுபோத்குமார் சிங் , 40 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆள்மாறாட்டம், மோசடி, ஓ.எம்.ஆர். தாளை சேதப்படுத்துதல் போன்ற நேர்மையற்ற காரியங்களில் ஈடுபட்ட 63 மாணவர்கள் பிடிபட்டதாகவும்இ “அவர்கள் மீதான புகார்களை விசாரிக்க 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.