டெல்லியில் குடிநீர் பஞ்சம் நிலவும் நிலையில், டேங்கர் லாரியில் வினியோகிக்கப்படும் தண்ணீரை பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக டெல்லியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாணக்யபுரி விவேகானந்தர் முகாமில் டேங்கர் லாரியில் வினியோகிக்கப்படும் தண்ணீரை போட்டி போட்டிக்கொண்டு mகுடியிருப்புவாசிகள் தண்ணீரை பிடித்து சென்றனர்.
இதனிடையே தண்ணீர் திருட்டில் ஈடுபடும் டேங்கர் மாஃபியா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.