டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய முகமது ஆரிஃப்பின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்துள்ளார்.
கடந்த 2000-ம் ஆண்டு, டிசம்பா் 22-ம் தேதி இரவு செங்கோட்டைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் சிலா், அங்கிருந்த வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இந்தத் தாக்குதலில் மூன்று வீரா்கள் உயிரிழந்தனா். இது தொடா்பான வழக்கில் முகமது ஆரிஃபிற்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.
இந்நிலையில் தன்னுடைய மரண தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய முகமது ஆரிஃபின் மனுவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரித்துள்ளார்.