புனே கார் விபத்து வழக்கில், சம்பந்தப்பட்ட சிறுவனின் காவல் ஜூன் 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புனேயில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் மோதி, இருவர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான சிறுவனை போலீசார் கைது செய்து, நீதிமன்ற அனுமதியின்பேரில் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், சிறுவனின் காவல் நிறைவடைந்ததால், ஜூன் 25-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து சிறார் நீதி வாரியம் உத்தரவிட்டுள்ளது.