டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிபெற்றது.
9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா- அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடத் தொடங்கிய அமெரிக்க அணி 20 ஓவர் முடிவில் 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 18 புள்ளி 2 ஓவர்களில் 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது