புதுக்கோட்டையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலரான ரவீந்திரன் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்த ரவீந்திரன், சர்ச்சைக்குறிய கருத்து தெரிவித்ததாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் மீண்டும் தமிழக காவல்துறை குறித்தும் அரசியல்வாதிகள் குறித்தும் விமர்சனங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார்.
இதுகுறித்து பலர் புகாரளித்த நிலையில், காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் ரவீந்திரனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.