அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்றார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் 60 உறுப்பினர்களை கொண்ட அருணாச்சல பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 46 இடங்களைக் கைப்பற்றியது.
தேர்தலுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த 10 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டப் பேரவைக் குழு தலைவராக பெமா காண்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், ஆளுநர் கே.டி.பர்நாயக்கை சந்தித்து அவர் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார் இந்நிலையில், இட்டாநகரில் உள்ள டிகே மாநில மாநாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில் அருணாச்சல பிரதேச முதல்வராக பெமா காண்டு பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.