தேனியில் விளைச்சல் குறைவு காரணமாக தக்காளியின் விலை கிலோவுக்கு 120 ரூபாயை எட்டியுள்ளது.
ஆண்டிப்பட்டி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் தக்காளியின் விளைச்சல் குறைந்துள்ளதால் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மேலும் ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக தேனிக்கு தக்காளி கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.