உதகை அருகே புலி ஒன்று முகாமிட்டுள்ளதால், “சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும்” என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உதகையில் புகழ் பெற்ற பைன் பாரஸ்ட் சுற்றுலா தளத்திற்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்க இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
இந்த நிலையில், அங்கு ஒரு புலி முகாமிட்டு உள்ளதாக, ஊழியர்கள் சிலர் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில், வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வன ஊழியர்கள் புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும், “சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.