விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கஞ்சா போதையில் தகராறு செய்த மகனை அடித்துக்கொலை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்- பேச்சியம்மாள் தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கஞ்சா போதைக்கு அடிமையான சுப்பிரமணியனின் மகன் அய்யனார் தினமும் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கஞ்சா போதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் உலக்கையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அய்யனார் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தம்பதியினரை கைது செய்தனர்.