நீட் தேர்வு நடைமுறையில் தவறு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு நடைமுறையில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை என்றும், நீதிமன்றத்தில் பதிலளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து ஆராய கல்வியாளர்கள் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய தர்மேந்திர பிரதான், ஒருவேளை தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசு கடமைப்பட்டிருப்பதாகவும், நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசியவில்லை என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை ஏற்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.