நாகப்பட்டினத்தில் கடையை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் எழுந்துள்ளது.
புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த அரசு தலைமை மருத்துவமனை, ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வெளிப்பாளையத்தில் ஆனந்தன் என்பவர் நடத்திவந்த கடையை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.
இதுகுறித்து ஆனந்தன் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.