ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள், அண்மையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் அங்கு நிலவும் சூழல் குறித்து தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, அங்கு பாதுகாப்புப் படை வீரர்களைப் பணியமர்த்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.