இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அஜித் தோவலின் பணிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஜூன் 10-ஆம் தேதி முதல் மூன்றாவது முறையாக அவருக்கு பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல பிரதமரின் பாதுகாப்புச் செயலர் பி.கே. மிஸ்ராவுக்கும் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டிருப்பதாக கேபினெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
1968-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஜித் தோவல், தேச பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்களைக் கையாண்டு வருகிறார்.
1972-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான பி.கே. மிஸ்ரா, நிர்வாக விவகாரங்களைக் கவனித்து வருகிறார்.
இதேபோல பிரதமரின் ஆலோசகர்களாக அமித் கரே மற்றும் தருண் கபூர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.