மாநிலங்களவை இடைத்தேர்தலையொட்டி, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித்பவாரின் மனைவி சுனீத்ரா பவார் மும்பையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
அப்போது தேசியவாத காங்கிரஸில் அஜித்பவார் பிரிவைச் சேர்ந்த மூத்த தலைவர் பிரஃபுல் படேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்களவைத் தேர்தலில் பாராமதி தொகுதியில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்துப் போட்டியிட்ட சுனீத்ரா பவார், 1 லட்சத்து 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.