ஆந்திர முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில், முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்போது, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, ஐந்து முக்கிய திட்டங்களுக்கு அவர் கையெழுத்திட்டார். அந்தவகையில், குறைந்த விலையில் உணவு வழங்கும் அண்ணா உணவகங்களை திறத்தல், திறன் மேம்பாட்டு திட்டம், சுமார் 30 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்குதல், ஜெகன்மோகன் ரெட்டியால் கொண்டுவரப்பட்ட நில உரிமைச் சட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.