மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே மும்மாரியம்மன் கோயிலில் பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் திருவிழா நடைபெற்றது.
தெற்கு சென்னியநல்லூர் கிராமத்தில் உள்ள மும்மாரியம்மன் கோயில் திருவிழா, கடந்த 9-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் மற்றும் காவடி எடுக்கும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, விரதம் இருந்த பக்தர்கள், மேள வாத்தியங்கள் முழங்க கோவிலை சென்றடைந்தனர்.
பின்னர், பக்தர்கள் கொண்டு வந்த பாலினை அம்மன் மீது ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.