உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.
உக்ரைன் ரஷ்ய போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு அமெரிக்க அரசு உதவிகளை செய்து வருகிறது.
அதில் தளவாட பொருட்கள், ஆயுத ஒப்பந்தங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை அமெரிக்க அரசு செய்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே 10 வருட பாதுகாப்பு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.