டி20 உலகக்கோப்பை தொடரின் 27வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வங்கதேசம் அணி வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை தொடரின் 27 வது லீக் ஆட்டம் கிங்ஸ்டவுன் பகுதியில் நடைபெற்றது. நெதர்லாந்து அணியும், வங்கதேச அணியும் மோதிய இப்போட்டியில், நெதர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.