டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக்கோப்பை தொடரின் 28 வது லீக் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெற்றது.
ஓமன் அணியும், இங்கிலாந்து அணியும் மோதிய இப்போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் பேட்டிங் செய்த ஓமன் அணி 13.2 ஓவர்களில் 47 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 3.1 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.