கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாட நடிகை சன்னிலியோனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை சன்னி லியோன், தமிழ், மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் வெளியான படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
மேலும், கல்லூரி நிகழ்ச்சிகளிலும் விருந்தினராக பங்கேற்று நடனமாடி வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் உள்ள பல்கலைகழக என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றில் இவர் பங்கேற்று நடனமாட இருந்தார்.
இந்நிலையில் கேரள பல்கலை துணை வேந்தர் நடிகை சன்னி லியோன் நடனமாட தடை விதித்து உத்தரவிட்டார்.