திருச்சி மாவட்ட எஸ்.பி-க்கு இன்ஸ்டாவில் கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் கொம்பன் பிரதர்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அக்கவுண்டில், திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமாரின் தலை விரைவில் சிதறும் என வீடியோ வெளியானது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வீடியோவை வெளியிட்டது 3 சிறார்கள் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுவர்களையும், அவரது பெற்றோர்களையும் அழைத்து திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் அறிவுரை வழங்கினார்.