பழனி அருகே காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டினர்.
கோம்பைபட்டி, ஆயக்குடி மற்றும் கொடைக்கானல் மலை அடிவார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பத்துக்கும் மேற்பட்ட யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனால், யானைகளை காட்டுக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், காட்டு யானைகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்டிய வனத்துறையினர், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.