ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருமுகை கிராமத்தில், கரும்பு, வாழை, மக்காசோளம் என அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில், இரவு நேரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் வனவிலங்குகள், பயிர்களை சேதப்படுத்தி வருவதுடன், குடியிருப்புகளில் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொளத்துக்காடு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஒற்றை யானை அட்டகாசம் செய்து விட்டு வெளியேறும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.