திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களை ஆபாசமாக பேசிய ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்கரைப்பட்டி மேற்கு தெரு பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் சக்திவேல் பொதுமக்களை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.