அதானி குழுமத்தைச் சேர்ந்த அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம் பென்னா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை சுமார் 10 ஆயிரத்து 442 கோடி ரூபாய் மதிப்பிற்கு வாங்கியுள்ளது.
பென்னா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தைச் சேர்ந்ததாகும். தென் மாநிலங்களில் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.