இலங்கைக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான ஹசிஸ் போதைப் பொருள் கடத்த முயன்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவர் வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கியூ பிரிவு போலீசார், பூக்கார தெருவில் உள்ள தனியார் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
விடுதியில் தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் கியாபரி பகுதியை சேர்ந்த தில்குமார் தாபா மங்கர், கவாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், ஹசிஸ் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
மேலும், மேற்குவங்க மாநிலத்தில் இருந்து காரில் ரகசிய அறை அமைத்து அதில் 75 கிலோ ஹசிஸ் போதைப்பொருள் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கியூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.