அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிகார அத்துமீறல்!- அண்ணாமலை குற்றச்சாட்டு
Mar 24, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிகார அத்துமீறல்!- அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Jun 14, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனநாயக விரோத நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனப் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, திருச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூடும் முயற்சியில், திமுக அரசு ஈடுபட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எஸ்.ஆர்.எம். ஹோட்டல் குழுமத்தின் நிறுவனர் திரு.பாரிவேந்தர் அவர்கள், பெரம்பலூர் தொகுதியில் திமுக அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை எதிர்த்துப் போட்டியிட்ட காரணத்துக்காகப், பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான இடத்தை, 1994 ஆம் ஆண்டு முறையாக குத்தகை பெற்று, சுமார் 30 ஆண்டுகளாக ஹோட்டல் நடத்தி வரும் எஸ்.ஆர்.எம்.குழுமத்தினை, உடனடியாகக் காலி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது.

எஸ்.ஆர்.எம். குழுமத்தால் கட்டப்பட்ட ஹோட்டல் கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பை இடிக்கத் திட்டமிட்டுள்ளதா திமுக அரசு? எஸ்.ஆர்.எம். நிறுவனம், குத்தகைக் காலத்தை நீட்டிக்கக் கோரி மூன்று முறை மனு அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வந்திருக்கிறது திமுக அரசு.

எனவே இது தொடர்பாக எஸ்.ஆர்.எம்.குழுமம் நீதிமன்றத்திடம் முறையிட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கையில், திமுக அரசு உள்நோக்கத்தோடு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை, நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

திமுக ஆட்சியில், அதன் நிர்வாகிகள் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவது வாடிக்கையானது. காலாகாலமாக, நில ஆக்கிரமிப்புகளும், கட்டப்பஞ்சாயத்தும், அத்துமீறல்களும், திமுக ஆட்சியின் ஒரு அங்கமாகவே விளங்கி வருகின்றன. ஆட்சி அதிகாரத் திமிரில், அரசியல் காரணங்களுக்காக மற்றவர்களைப் பழிவாங்குவது திமுகவுக்கு வழக்கமானது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக, கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக, மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மண்டபத்தை இடித்துப் பழி தீர்த்துக் கொண்ட திமுக, இன்றும் திருந்தவில்லை என்பதே தற்போது திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டலைக் கைப்பற்ற நடக்கும் முயற்சி நிரூபிக்கிறது.

கடந்த 2006 – 2011 ஆட்சிக் காலத்தில், இது போன்ற அராஜகச் செயல்பாடுகளால்தான், திமுகவை மக்கள் 10 ஆண்டுகள் தூக்கி எறிந்தார்கள் என்பது சிறிதேனும் நினைவில் இருக்குமேயானால், பொதுமக்களின் வாக்குகள் மீது பயம் இருக்குமேயானால், மீண்டும் அதே போன்ற அநியாயமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் மூன்று ஆண்டு கால இருண்ட ஆட்சியால், மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்பது நன்கு தெரிந்ததால், முடிந்த வரை குடும்பத்துக்காகச் சுருட்டுவோம் என்ற நோக்கத்தில் மட்டுமே செயல்படும் திமுக, திருந்த வாய்ப்பே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியிருக்கிறது.

சாமானிய பொதுமக்கள், மாண்புமிகு நீதிமன்றம் மீது கொண்டுள்ள நம்பிக்கையைச் சிதைப்பதைப் போல நடந்து கொள்ளும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வழக்கு நிலுவையில் இருக்கையில், மாண்புமிகு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: bjpbjp k annamalaitn bjp
ShareTweetSendShare
Previous Post

ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ளார் மோடி!

Next Post

பரோட்டா சூரி அல்ல… மிரட்டல் ஹீரோ!

Related News

பாமகவின் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!

சிறுமிக்கு பாலியல் தொல்லை – திமுக நிர்வாகி கைது!

முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராகும்படி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு !

மேற்குவங்க மம்தா அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies