பரோட்டா சூரி இன்று புகழ்பெற்ற ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில் நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறார். காமெடி நடிகர் கதையின் நாயகனாக மாறியது எப்படி? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…!
பரோட்டா சூரி இல்ல கதையின் நாயகன்
எப்போதுமே லைப்ல முன்னேறனுன்னு நினைக்கிறவங்க முதல்ல ஏறுற பஸ்ஸூ சென்னைக்கு தான். எப்படியாது நமக்கு பிடிச்ச துறையில ஜெயிச்சிடனுன்னு ஒரு வெறில அந்த பஸ்ஸ பிடிக்கிறோம். அப்படி தான் நடிக்கனுன்ற ஆசையில பஸ் ஏறிருக்காறு சூரி.
சென்னைக்கு வந்த பின்ன தான் தெரியுது நம்ம தாண்டுனது பாதி கிணறு இன்னும் நிறையா இருக்குன்னு. பல போராட்டத்திற்கு பிறகு, நினைவிருக்கும் வரை, சங்கமம், காதல், தீபாவளின்னு யாரும் கவனிக்கப்படாத கதாபாத்திரத்துல நடிக்க ஆரம்பிக்கிறாரு சூரி. ஒரு கட்டத்துல வெண்ணிலா கபடி குழு படத்துல நடிக்க வாய்ப்பு கிடைக்குது. அங்க சூரின்ற பேரு புரோட்டா சூரியா மாருது.
புரோட்டா சூரி
முக்கியமா சொல்லனுன்னா சிவகார்த்திகேயன், சூரி காம்போ எப்போமே எல்லாரையும் அட்ராக்ட் பன்னிடும். ரெண்டு பேரு பேசுற யதார்த்தமான பேச்சுகளுக்குனே தனி ஆடியன்ஸ் இருந்த நால, சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு பாலோவர்ஸ் இருந்துச்சோ அதே போல சூரிக்கும் வர ஆரம்பிச்சுட்டாங்க.
ரஜினி முருகன்
அதே மாதிரி ஒரு ஊருகாரங்கன்ற நாலே தனி பாசம் இருக்க தான் செய்யும். அந்த வகையில சூரிய சப்போர்ட் பன்றதுக்கு சசி குமார், சமுத்திரகனி, சிவகார்த்திகேயன்லாம் முக்கிய பங்கா இருந்தாங்க. இன்னும் சொல்லனுன்னா எப்படியாது சூரி பெரிய நடிகனா ஆக்கிடனுன்ற ஆசையில ரொம்ப ஆர்வமா அவங்க இருந்திருக்காங்க.
கருடன்
ஒரு வழியா வெற்றிமாறன் இயக்கத்துல விடுதலை படம் கிளிக் ஆன உடனே சிவகார்த்திகேயனுக்கு போன் பன்னி டிஸ்கஸ் பன்னிருக்காரு சூரி. ஆனா படம் வெளியான பின்ன ஒரு நடிகனுக்கு அழகு, உடல் அமைப்பு, ஸ்டைல்ன்னு எதுவும் தேவையில்ல திறமை இருந்தாலே போதும்ன்னு பேசாத ஆளு இல்ல.
விடுதலை படம்
விடுதலை மாதிரியே கருடன் படமும் பெரிய வெற்றிய தேடி கொடுத்துச்சு சூரிக்கு. சரி கதைக்கு வருவோம் புரோட்டா சூரின்ற அடையாளம் 10 வருஷத்துக்கு மேல சூரிக்கு இருந்துகிட்டு இருக்கு. ஆனா இப்ப கதையின் நாயகன்னா அடுத்த அடுத்த படங்கள் நடிச்சிகிட்டு இருக்காரு சூரி. அப்படியிருக்கையில கருடன் படத்தோட நன்றி தெரிவிக்கும் விழால சசிகுமார் இந்த ஒரு விஷயத்த குறிப்பா சொல்லிருப்பாரு.
இனி புரோட்டா சூரின்னு சொல்லாம கதையின் நாயகன்னு சொல்லுவாங்கன்னு.
சசிகுமார் சொன்னது என்னமோ உன்மை தான். விடுதலைக்கு பின்ன காலப்போக்குல புரோட்ட சூரின்ற பேரு வெறும் சூரியா மாறிடுச்சு. பொதுவா காமெடியன் நடிகர்களா ஆகிட்டா இதுக்கு மேல நாயகன்னா மட்டும் தான் நடிப்பேன்னு சொல்லுவாங்க ஆனா சூரி…
ரைட்டு, கொட்டுகாளி, விடுதலை -2 ன்னு அடுத்தடுத்த படங்கள் சூரிக்கு வெயிட்டிங்ல இருக்கு. அடுத்தடுத்து புது படங்கள் நடிச்சிகிட்டும் தான் இருக்காகரு. சூரியோட பெர்பார்மன்ஸ் ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாச வித்தியாசமா இருக்கபோதுன்னு அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திட்டு இருக்காங்க…. காத்திருந்து பாப்போம்….!