தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில்
ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
தேவராயன்பேட்டை சிவன்கோயில் அருகே முஹம்மது பைசல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது பண்டைய கால ஐம்பொன் சிலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து முகமது பைசல் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மேலும் சிலைகள் இருக்கிறதா என பள்ளம் தோண்டி தேடும் பணியில் ஈடுபட்டனர்.