அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தண்ணீர் பேரலில் மூழ்கடித்து ஆண் குழந்தையை கொன்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உட்கோட்டையைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கு, கடந்த 38 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனையடுத்து சங்கீதா தனது குழந்தையுடன் தாய் வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தனது அருகே குழந்தையை படுக்க வைத்துவிட்டு உறங்கிய சங்கீதா, மீண்டும் எழுந்து பார்த்தபோது குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.
அப்போது வீட்டின் பின்புறமுள்ள தண்ணீர் பேரலில் போர்வையால் சுற்றிய நிலையில் குழந்தையை மூழ்கடித்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், சங்கீதாவின் தாய், தந்தையரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.