வேலூர் அருகே லாரி மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழுவினர், வேலூரில் உள்ள தங்க கோவிலை சுற்றிப்பார்த்துள்ளனர்.
பின்னர் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, வேலூர் வள்ளலார் பகுதியில் பின்னால் வந்த லாரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் கீழே கவிழ்ந்தது.
இதில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.