தெலுங்கானா மாநிலம், நாராயண பேட்டை அருகே பட்டப்பகலில் ஒருவரை பலர் கண் முன்னே கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சஞ்சீவ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தனியாக இருந்த சஞ்சீவியை சுற்றி வளைத்த மர்ம நபர்கள் கட்டைகளால் தாக்கி படுகொலை செய்துள்ளனர்.
அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.