தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி அருகே ஆறு வயது குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
சுல்தானா பாத் நகரின் அரிசி ஆலையில் கூலி வேலை செய்து வரும் தம்பதி, இரவில் தங்களது இரு குழந்தைகளுடன் படுத்து உறங்கியுள்ளனர்.
பின்னர் நடுஇரவில் எழுந்து பார்த்தபோது தங்களது 6 வயது மகளை காணாமல் தம்பதி அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அப்போது சிறுமி காட்டுப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. விசாரணையில் அதே ஆலையில் பணியாற்றி வந்த பலராம் என்பவர் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது சிசிடிவி காட்சிகளின் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து பலராமை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.